மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா இவ்வளவா... விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி டிடி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரின் கலகலப்பான பேச்சுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும், ஆடியோ வெளியீட்டு விழா போன்றவைகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் சின்னத்திரையை தாண்டி வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வாறு தொகுத்து வழங்கி வரும் டிடி ஒரு எபிசோடிற்கு ரூ. 3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.