தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தாய்க்கு சால்வை போர்த்தி வரவேற்ற தளபதி விஜய்.. இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்த்தீங்களா மக்களே..!!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். ரசிகர்கள் இவரை விஜய் என்று அழைப்பதை விட, தளபதி என்று அழைப்பதையே மிகவும் விரும்புவர். இதுவரையிலும் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியையே அளித்துள்ளது.
சில படங்களில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் அடுத்த படத்தில் தனது முழு திறமையும் காட்டுவார். இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் "வாரிசு" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
குடும்ப கதைக்களத்தில் உருவாகிய ஆக்சன் கலந்த இந்த திரைப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது. மேலும் வாரிசு படத்தை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தின் அறிவிப்பு விரைவில் பட குழுவிடமிருந்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிறுவயதில் நடிகர் விஜய் தனது அம்மா சோபா சந்திரசேகருக்கு சால்வை போர்த்தும் ஒரு புகைப்படம் கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் தளபதி விஜய் சிறுவயதில் இருக்கும்போது எடுத்ததாகும்.