#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிசினஸ்மேனாக மாறிய விஜய் தேவரகொண்டா! அசத்தலான புதிய முயற்சிக்கு குவியும் வாழ்த்துக்கள்!
தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக, இளம் பெண்களின் கனவுகண்ணனாக வலம் வருபவர் நடிகர் விஜய தேவரகொண்டா. இவர் அர்ஜுன் ரெட்டி, கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்துள்ளார்.
மேலும் தமிழிலும் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மொழி புரியவில்லை என்றாலும் இவர் நடித்துள்ளார் என்பதற்காகவே இவரது படங்கள் பார்ப்பவர்கள் ஏராளம்.
இவ்வாறு அவர் சினிமாவில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும் படத்தயாரிப்பு, அறக்கட்டளை நிறுவனம் என பிசினஸிலும் செம பிஸியாக உள்ளார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா தற்போது புதிதாக இ பைக் நிறுவனம் ஒன்றை துவங்கவுள்ளார். இதற்கான அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதன் கிளைகள் துவக்கத்தில் ஹைதராபாத் மட்டும் செகந்திராபாத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.