#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking : மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த்.! ஒரு வழியாக வீடு திரும்பினார்.!
தேமுதிகவின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையான மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தரா. அவருக்கு இன்று வரையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
மேலும் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் விஜயகாந்த் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று ஒரு செய்தி பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது.
அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை கவலை அடைய வைத்த நிலையில், தற்போது நீண்ட நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் விஜயகாந்த் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.