திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இவருக்குத்தான் மார்கெட்டே இல்லையே.. விஜயகாந்தை அவமானப்படுத்திய சில பத்திரிகையாளர்கள்..! விஜயகாந்த் கொடுத்த பதிலடி..
தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வந்தவர் நடிகர் விஜயகாந்த். அந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றும் கமலுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்ததோ, அதே அளவிற்கு விஜயகாந்திற்க்கும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.
மேலும் திரையில் மட்டுமின்றி தனது நிஜவாழ்க்கையிலும் இவரை பலர், ரியல் ஹீரோ என்றுதான் அழைப்பர். ஏனெனில் உதவி என்று யார் கேட்டாலும், உடனடியாக செய்து விடும் தங்கமான மனதை கொண்டவர். கம்பீரமாக இருந்த இந்த மனிதருக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் படம் என்றாலே ரசிகர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து எப்பொழுது படம் போடுவார்கள் என்று தியேட்டர் வாசல் முன் காத்திருப்பர்.
இந்த நிலையில், ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போய்விட்ட காரணத்தால், மதுரைக்கு திரும்பி சென்று விடலாம் என்று திட்டமிட்டு தனியார் விடுதியில் விஜயகாந்த் தங்கியிருந்தாராம்.
அந்த ஹோட்டலில் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவரும் தங்கும் நிலையில், விஜயகாந்துடன் ஒன்றாக சாப்பிட்ட நட்பு ரீதியான பழைய சீனியர் பத்திரிக்கையாளர்கள் அந்த விடுதிக்கு வரும்போது, விஜயகாந்தின் அறையைப் பார்த்து ஒதுங்கி விடுவார்களாம்.
இதற்கு காரணம் இவருக்கு தான் மார்க்கெட்டே இல்லையே அவரிடம் எதற்காக நாம் பேச வேண்டும்? என நினைத்து செய்தார்கள் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்னர் நடிகர் விஜயகாந்துக்கு மீண்டும் பட வாய்ப்புகள் குவிந்த போது பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற நிலையில், விஜயகாந்த் "நீங்கள் எல்லாம் மார்க்கெட் உள்ள ஹீரோவிடம் தான் பேசுவீர்கள்" என்று பதிலடி கொடுத்து விட்டார் என்று வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.