#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜயகுமாரின் மோசமான செயல்களை அம்பலப்படுத்திய மகள் வனிதா! கண்ணீர் மல்க பேட்டி!
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் விஜயகுமர். நடிகர், வில்லன், போலீஸ் என பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் மதுரவாயிலில் அமைந்துள்ள தனது மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருக்கும் எனது மகள் வனிதா அங்கிருந்து வெளியேற மறுக்கிறார் என நடிகர் விஜயகுமார் நேற்று காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
விஜயகுமாரின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அவரது மகள் வனிதாவை வீட்டைவிட்டு வெளியேற்றினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, எனது தந்தை என்னை காரணமின்றி வீட்டை விட்டு வெளியேற்றினார். இது கொஞ்சம் கூட நியாயமில்லை என்று கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு என் சகோதரர் அருண் விஜய்யும் காரணமாக இருந்தார். எனது தந்தையின் புகாரின் பேரில் என்னை அழைத்து சென்ற போலீசார் என்னை அடித்து துன்புறுத்தினர். எனது தந்தை அராஜகம் செய்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும் எனது தந்தை அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். சொந்த மகள் என்று கூட பாராமல் நடுரோட்டில் நிற்கவைத்து, அழகு பார்க்கிறார். தற்போது நான் எங்கு செல்வது என்று கூட தெரியவில்லை. என மனக்குமுறலுடன் வனிதா கூறுகிறார்.