மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம ஆவேசத்துடன், பெண் ரசிகையை கழுவி ஊற்றிய நடிகை விஜயலட்சுமி.! ஏன்? அப்படி என்னதான் நடந்துச்சு??
தமிழ் சினிமாவில் சென்னை-28 படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் விஜயலட்சுமி.அதனை தொடர்ந்து அவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து பாதியிலேயே விலகினார். மேலும் விஜயலட்சுமி ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.
விஜயலட்சுமி தன்னுடைய பள்ளி நண்பரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் ஆகட்டிவாக இருக்கக் கூடியவர். அவ்வப்போது தனது போட்டோ ஷூட் மற்றும் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதனைக் கண்ட பெண் ரசிகை ஒருவர், இந்த ஆட்டம் தேவையா? ஒரு அம்மாவா இருக்க! என கமெண்ட் செய்துள்ளார். அதனைக் கண்ட விஜயலட்சுமி செம காட்டத்துடன் அம்மானா மூலையில் உக்காந்துக்கிட்டு அழனுமா? ஐயோ, அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு, இனிமே எல்லாருக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். நான் ஒரு தியாகினு. அதை நீ பண்ணு உனக்கு தியாக செம்மல்னு சிலை வைப்பாங்க. எனக்கு இன்னும் வாழ்க்கை உள்ளது. குழந்தை பெற்ற பல அம்மாக்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது.
அவர்கள் விரும்பியதை செய்வார்கள்.விரும்பிய ஆடைகளை அணிவார்கள். உன்ன மாதிரி ஆளுங்களால தான் நிறைய பொண்ணுங்களுக்கு பிரச்சனை. உங்க அட்வைஸ் கூந்தலை பின்னி நீங்களே பூ வைத்துக் கொள்ளுங்கள் என கழுவி ஊற்றி பதிலடி கொடுத்துள்ளார்.