குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
செம ஃபிட்டாக மாறிய விஜய் சேதுபதி.. வெளியான புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்த திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் முதன்முதலில் 'பீட்சா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின்பு பல திரைப்படங்களில் நடித்து தொடர் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வந்தார். தற்போது கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இவர் வில்லனாக நடித்த திரைப்படங்களான மாஸ்டர், பேட்ட, விக்ரம், விக்ரம் வேதா, இந்தியில் ஜவான் போன்ற திரைப்படங்களில் நடித்து வில்லன் நடிகராகவும் மக்களை கவர்ந்தார். இவ்வாறு சினிமாவில் பிசியான நடிகராக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் மிஸ்கின் இயக்கத்தில் தானு தயாரிப்பில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ட்ரெயின். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. இப்புகைப்படத்தில் செம பிட்டாக இருக்கிறார். விஜய் சேதுபதி திரைப்படத்திற்காக தன் தோற்றத்தை மாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.