சூர்யாவை அந்த மாதிரி வார்த்தை பேசிய பிரபல பத்திரிகையாளர்.. வைரலான வீடியோவால் பரபரப்பு.!



Viral video about surya

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வரலாறு சம்மந்தப்பட்ட படமான 'கங்குவா' படத்தின் க்ளிம்ப்சே  சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியானது.

surya

கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், பாபி தியோல், ரவி ராகவேந்திரா, பி. எஸ். அவினாஷ், நவீன் சிங் என்று பல முன்னணி நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில்,சூர்யாவை பற்றி செய்யாறு பாலு பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், "சூர்யா அவரது குழந்தைகளுடன் மும்பை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியபோது, மீடியாக்கள் புகைப்படம் எடுத்தனர். குழந்தைகளை போட்டோ எடுக்காதீங்க என்று அப்போது கோவப்பட்டார் சூர்யா.

surya

இதே சூர்யா தான் 10மணிக்கு அனுமதிக்கப்படும் கீழடிக்கு, 9 மணிக்கே சென்றார். அங்கு வெளியில் குழந்தைகள் மட்டுமின்றி வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோரும் காத்திருக்க, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே இவருக்கு சுற்றிக் காட்டிகொண்டிருந்தார். நிஜத்தில் சூர்யா ஒரு காகிதப் புலி என்று செய்யாறு பாலு கூறினார்.