எல்லா ஹீரோக்களுக்கும் கண்டிப்பா இந்த ஆசை இருக்கும்! இல்லைனா அது சுத்தபொய்! நடிகர் விஷ்ணு விஷால் ஓப்பன் டாக்!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதனைத் தொடர்ந்து அவர் நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் இறுதியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது பல படங்கள் அவரது கைவசம் உள்ளது. மேலும் ஒரு படத்திற்காக தற்போது சிக்ஸ் பேக்கும் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில், தனது திரையுலக பயணம் குறித்து பேசியிருந்தார். அப்போது அவர், எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு பெரிய கமர்ஷியல் ஆக்சன் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். மேலும் காரை விட்டு இறங்கியதும், தன்னை பார்க்க ரசிகர்கள் அப்படியே சூழ்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.
அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று யாராவது சொன்னால், அது சுத்தப்பொய். நான் உட்பட இரு நல்ல படங்களை செய்துவிட்டு ஒரு கமர்ஷியல் படத்தில் நடிப்போம். அவை சில நேரங்களில் வெற்றிபெறும். தோல்வியும் அடையலாம். ஆனாலும் கமர்ஷியல் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும் என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.