மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐஸ்வர்யா ராய் குறித்து டெலிட் செய்யப்பட்ட அந்த சர்ச்சை மீம் இதுதான்! புகைப்படம்!
இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படும் செய்தி விவேக் ஓபராய் ஐஸ்வர்யா ராய் பற்றிய மீம்தான். ஒருகாலத்தில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் விவேக் ஓபராய் தற்போது வாய்ப்புகள் குறைந்து வேற்றுமொழி படங்களில் வில்லனாக நடித்துவருகிறார்.
ஆரமப்பதில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யும், விவேக் ஓபராயும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் நின்றது. அதேபோல விவேக் ஓபராய்க்கு முன்னர் ஐஸ்வர்யா சல்மான்கான் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
இதெல்லாம் கடந்து ஒருவழியாக ஐஸ்வர்யா அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிந்து முடிவுகள் வர இருக்கும் நிலையில், தேர்தல் மற்றும் ஐஸ்வர்யா ராய்யை கலாய்ப்பதுபோல மீம் ஒன்றை செய்து ரசிகர் ஒருவர் விவேக் ஓபராய்க்கு அனுப்பியுள்ளார்.
அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விவேக் ஓபராய். இதை மீம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து விவேக் ஓபராய் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் அந்த புகைப்படத்தை டெலிட் செய்ததோடு மன்னிப்பும் கேட்டுள்ளார் விவேக் ஓபராய்.
விவேக் ஓபராய் டெலிட் செய்த அந்த மீம் இதுதான்.