#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! பல சிக்கல்களுக்கு பிறகு, இப்படியொரு அட்டகாசமான தகவலா? உற்சாகத்தில் ரசிகர்கள்!!
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் முதல் படம், 'எனை நோக்கி பாயும் தோட்டா'. படம் குறித்த அறிவிப்பு வந்த நாளிலிருந்து படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸான வரை இந்தப் படத்தின்மீது அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்தது.
சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான 'விசிறி' பாட்டு பலரது மனதையும் கவர்ந்த நிலையில், படம் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் இருந்துவருகிறது. இருப்பினும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக இப்படம் ரிலீசாவதில் சில சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் அடுத்த வாரம் ரிலீஸாகவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.