மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவமனையில் இருக்கும் நடிகர் ரஜினியின் நிலை என்ன? முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்!!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து சில வதந்திகளும் பரவி வந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினி வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காகதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இது அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு சிறு திருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியை அவரது உறவினரும், நடிகருமான ஒய்.ஜி மகேந்திரன் சந்தித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் ரஜினியை பார்த்தேன்.அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி தனக்கு எதுவும் தெரியாது. ஆனால் தீபாவளியை முன்னிட்டு வெளிவரவிருக்கும் அண்ணாத்த படத்தை பார்க்க அவர் வந்துவிடுவார் என தெரிவித்துள்ளார். இது கலக்கத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.