சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
இவ்வளவு நன்மைகளும் கற்றாழையில் கிடைக்கிறதா?!,,மிஸ் பண்ணிடாதீங்க ஒரு தடவை யூஸ் பண்ணி பாருங்க..!
கற்றாழை Aloe Vera என்ற தாவரவியல் பெயரை கொண்டது. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை மற்றும் செங்கற்றாழை என கற்றாழையில் பல வகைகள் உள்ளன.
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும், சித்த மருத்துவத்தில் கருப்பை தொடர்பான பல்வேறு நோய்களுக்கும் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மாதவிடாய் தொந்தரவுகளை ஒழுங்குபடுத்தவும் கற்றாழை உதவுகிறது. உடலின் எடையை குறைக்கவும் கற்றாழை சாறு உதவும்.
நெஞ்சு எரிச்சலைத் தணித்து வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. கற்றாழை சாறு உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்கிறது, மேலும் ஈரலைச் சுத்தப்படுத்தி தோலை பாதுகாக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரம்பநிலை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதிலுள்ள மெக்னீசியம் நரம்பையும், தசைகளையும் வலுவாகப் பார்த்துக்கொள்ளும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
வெயில் காலங்களில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாவதுடன் கண்கள் சிவந்து விடும். அந்த சமயங்களில், கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் ஓய்வெடுங்கள். இப்போது கண்களில் எரிச்சல், குறைவதுடன், சிவந்த நிறமும் மறைந்து விடும்.
கற்றாழை சோற்றை பசும் பாலில் தயாரித்த மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும். முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
மூலத்தால் பாதிக்கப்பட்வர்கள் கற்றாழையின் சோற்றை எடுத்து நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு கைப்பிடி முருங்கைப்பூ சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து, நெல்லைக்காய் அளவுக்கு தினந்தோறும் காலையில் ஒரு வாரம் வரை சாப்பிட்டுவந்தால், மூலத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.