மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வுளவு நன்மைகள் ஏற்படுமா?.. தாய்மார்களே தெரிந்துகொள்ளுங்கள்.!
குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு சுரக்கும் தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவி செய்கிறது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் வேறு எந்த உணவாலும் குழந்தைகளுக்கு வழங்க இயலாதவை ஆகும். குழந்தைகளுக்கு தாய் பாலூட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இன்று காணலாம்.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவதால் நோய்த்தொற்று அபாயம் குறைகிறது. ஒவ்வாமை பிரச்சனை குழந்தைகளை நெருங்காது. சிறுவயதிலேயே ஏற்படும் உடல் பருமன், டைப்-1 மற்றும் டைப்-2 நீரழிவு நோய் பிரச்சனைகள் ஏற்படாது. காது பகுதிகளில் ஏற்படும் தொற்றுக்கான வாய்ப்புகள் குறையும்.
அதனைப்போல, இரைப்பை குடல் அலர்ஜி பிரச்சனை தவிர்க்கப்படும். குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக நடைபெற உதவும். போலியோ மற்றும் டெட்டனஸ் டிப்திரியா, ஹீமோபிளஸ் இன்ப்ளுபைசா போன்ற தடுப்பூசியின் செயல்பாடுகளுக்கு தாய்ப்பாலே சிறந்த பங்கை செய்கிறது.
தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உதவி செய்வதால், பற்கள் சிதைவு அபாயம் குறையும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவது அறிவாற்றல் வளர்ச்சியுடன் தொடர்புடையது ஆகும். நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. சுவாசப்பாதை நோய்தொற்றும் குறையும்.
தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. வைரஸ் சார்ந்த நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. தாய்மார்களுக்கு பால் மார்பிலே தங்கி இருந்தால், அதுசார்ந்த பிரச்சனையும் ஏற்படும். அதனை தவிர்க்கவும் உதவி செய்கிறது.