தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#BreastFeedingDay: தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. தெரிஞ்சிக்கலாம் வாங்க..!
தாய்ப்பால் கொடுப்பதினால் தாய் - சேய் இருவருக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் உலகளவிலான தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தான் பெற்றெடுத்த மற்றும் பெற்றெடுக்காத செல்வங்களுக்கு தாய் கொடுக்கும் ஆரோக்கிய பரிசே தாய்ப்பால் ஆகும்.
குழந்தை பிறந்ததும் தாயிடம் இருந்து கிடைக்கும் பாலை மருத்துவர்கள் "கொலஸ்ட்ரம்" என்று கூறுவார்கள். புரோட்டின் மற்றும் கொழுப்பு நிறைந்து காணப்படும் பால் குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து ஆகும். இதனை குழந்தை பிறந்து ஒரு மணிநேரத்திற்குள் கொடுக்க வேண்டும். இன்றைய நவீன யுகத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலினை பாதுகாப்பாக எடுத்து வைத்து குழந்தைகளுக்கு ஊட்டுவது குறித்த தொழில்நுட்பம் இருக்கின்றன.
அதனைப்போல, பெண்கள் பணியாற்றும் இடங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றிலும் தாய்ப்பால் ஊட்ட சிறப்பு பிரத்தியேக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து, உயிர்சத்து, புரதசத்து ஆகியவை கிடைப்பது உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு முழு காரணியாக இருப்பது தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்ணுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு நோய், மனசோர்வு ஆகியவை நீங்கும்.