மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் எடையை குறைத்து... ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டைகோஸ் ...!!
முட்டைக்கோஸ் இலை காய்கறிகளின் சிறந்த உணவாக மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில், இலை கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடண்டுகள் அதிக அளவில் உள்ளன.
முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் முட்டைக்கோஸில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க முயலுபவர்களுக்கு முட்டைக்கோஸ் உதவும்.
முட்டைக்கோஸில் வைட்டமின்கள் A, B2 மற்றும் C , கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் சல்பர் போன் போன்ற விட்டமின்கள் உள்ளன.
முட்டைக்கோஸ் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 100 கிராம் முட்டைகோஸில் 36.6 மில்லிகிராம் வைட்டமின் சி இருக்கிறது.
முட்டைக்கோஸில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் இதை சாப்பிடும்போது பசியை கட்டுப்படுத்தலாம். மேலும் முட்டைகோஸ் செரிமானத்திற்கு நல்லது.
முட்டைக்கோஸ் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை முட்டைகோசுக்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முட்டைகோஸில் இருக்கும் பொட்டாசியம் இதற்கு உதவுகிறது.
முட்டைக்கோஸில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.