மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்களா? எதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது?



causes of liver damage

மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மதுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம்.

மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் அதற்க்கு உண்டு.

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், தொடர்ச்சியாக மது அருந்துதல் ஆகியவை நமது கல்லீரலை கடுமையாக பாதிக்கும். மதுப்பழக்கத்தால் கல்லீரல்நோய் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டாலே கல்லீரல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் கல்லீரல்நோய் இருக்கும்பொழுது மதுபழக்கத்தை தொடர்ந்தால் உயிரிழப்பது உறுதி.

liver

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். இது வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. 

 பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப்பொருள் கெடாமல்  இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை 100 சதவீதம் கல்லீரலை குறி வைத்து தாக்குகிறது என கூறுகின்றனர் சிகிச்சையாளர்கள்.

ஃபிரைட் ரைஸ், எண்ணெயில் பொறித்த பண்டங்களை உட்கொள்ளும்போது, கல்லீரலுக்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும். இதனால் அதன் செயல்திறன் விரைவில் பாதிப்படைவதற்கான வாய்ப்பு உள்ளது.