உங்க குழந்தை உறங்கும் போது இப்படி செய்யிறாங்களா?.. நல்லதா? கெட்டதா?..!
வீட்டில் இருக்கும் குழந்தைகள் உறங்கும் நேரங்களில் அவ்வப்போது வாயை திறந்த நிலையில் வைத்து உறங்கிக்கொண்டு இருப்பார்கள். அப்போது, மூக்கு வழியாக சுவாசம் செல்வதற்கு பதில், வாய் வழியாக சுவாசம் நடைபெறும். இவ்வாறு குழந்தைகள் உறங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. சுவாச பாதைகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில், மூக்குவழியே சுவாசம் செய்ய சிரமம் கொள்வார்கள். இதனால் வாய் வழியே மூச்சு விடலாம்.
நாமே சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் போது, மூக்கு வழியாக சுவாச பாதிப்பு ஏற்படுவது தடைபடும். அந்த சமயத்தில், வாய் வழியாக நாமே சுவாசம் மேற்கொண்டு இருப்போம். குழந்தைகளுக்கும் இதே நிலை தான். அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனை ஏற்பட்டு இருப்பின் சுவாச பாதை அடைபட்டு, வாயை உபயோகித்து சுவாசிப்பார்கள்.
குழந்தைகளது சுவாசப்பாதையில் நாசி பகுதியை பிரிக்கும் குருத்து எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், வாய்வழியே சுவாசம் நடக்கலாம். மூக்கின் வழியே சுவாசிப்பது தான் உண்மையில் நல்லது. மூக்கின் வழியே உள்ளே இழுக்கப்படும் காற்று, காற்றில் படிந்துள்ள தூசிகள் நாசிப்பகுதியால் நீக்கம் செய்யப்பட்டு சுத்தமான காற்று உள்ளே அனுப்பி வைக்கப்படும்.
வாய் வழியாக சுவாசித்தால் தூசி, அழுக்கு, வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகள் ஏற்படும். இதனால் சுவாச பாதையில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் எப்போதாவது வாய் வழியே சுவாசித்தால் பிரச்சனை இல்லை, அடிக்கடி அப்படி செய்யும் போது அலட்சியத்துடன் இருக்க கூடாது. மருத்துவரை அணுகுவது நல்லது.