அச்சச்சோ.. குழந்தைகள் ஸ்மார்ட்போன் யூஸ் பண்றங்களா?.. மாரடைப்பு, பக்கவாத அபாயம்..!



children-use-smartphone-ends-heart-attack

 

இன்றளவில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை எந்நேரமும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் திரையில் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில், இதய நோய்களுக்கு வாய்ப்புகள் உள்ளன என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பின்லாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சிறார்களின் ஸ்மார்ட்போன் திரை பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

children

அதாவது, ஸ்மார்ட்போன் உபயோகம் செய்யும் குழந்தைகளின் எடை, இரத்த அழுத்தம் சாதாரண வரம்பில் இருப்பினும், குழந்தை பருவத்திலேயே செயலற்ற தன்மை, மாரடைப்பு, நரம்பியல் பிரச்சனைகள், பக்கவாதத்தை ஏற்படுத்தலாம் என முடிவுகள் வந்துள்ளன.