தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நான் ஸ்டிக் தவா பயன்படுத்தினால் கேன்சர் ஆபத்து., மண்பானை சமையலே சிறந்தது - மருத்துவர் அறிவுரை.!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெயரளவுக்கு கிராமங்களில் இருந்த மண்பாண்ட சமையல் அனைத்தும், நமது பாட்டிகள் சிவலோக பதவி அடைந்ததும் காணாமல் போயின. நகரங்களில் அவசர பணிகளுக்காக வாழும் பலரும் மண்பாண்ட சமையலை மறந்துவிட்டனர். தற்போதைய நிலைமைக்கு ஏற்பட சில்வர் உட்பட பிற பொருட்களால் செய்யப்படும் பாத்திரங்களை வைத்து சமைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இவ்வளவு ஆபத்தா?.. பரோட்டா பிரியர்களே உஷார்.. உயிரே பறிபோகும் அபாயம்.!
ஒருசில இடங்களில் எந்நேரமும் எந்தவகை உணவுக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான செயல்கள் உடலுக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை மருத்துவர் எச்சரிக்கிறார்.
மருத்துவரின் அறிவுரை
இதுகுறித்து மருத்துவர் ஜெபா ஜூலி கூறுகையில், "ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவுகளை போல வீட்டில் செய்யும் சாதமும் தற்போது ஆபத்தானதாக மாறி வருகிறது. எண்ணெய், காரத்திற்கு சேர்க்கப்படும் துரித உணவு பொருட்கள் உடல்நிலைக்கு ஆபத்தானது. இதனால் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் ஏற்படும்.
வீட்டில் செய்யப்படும் உணவுகளும் தற்போது துரித உணவுகளை போல கூடுதல் எண்ணெய், உப்பு, பிளேவர் காரம், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து சமைக்க தொடங்குகின்றனர். இதனால் கடையில் சாப்பிடும் உணவுகளை போல பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் பெண்களுக்கு பிசிஓடி எனப்படும் மாதவிடாய் பிரச்சனையும் ஏற்படும்.
நாவுக்கு இனிமையான துரித உணவுகளை ஒதுக்குங்கள்
வேகவைத்த காய்கறிகள், பச்சை காய்கறிகள், பழங்கள், முளைகட்டிய பயிர்கள் மட்டுமே உடலுக்கு நல்லது. நாவிற்கு இனிமையாக இருக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட பொருட்கள் மிகவும் ஆபத்தானது. நான் ஸ்டிக் தவா எனப்படும் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுகளும் ஆபத்தானவை ஆகும். நான் ஸ்டிக் தவாவில் இருக்கும் கெமிக்கல் ஆபத்தானது.
நான் ஸ்டிக் தவா வைத்து எண்ணெய் குறைவாக பயன்படுத்தி சமைக்கும் நபர்களுக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை உபயோகம் செய்ய முறைகள் இருக்கின்றன. கேன்சரும் ஏற்படுகிறது. மண்பானைகளில் செய்யப்படும் உணவுகள் மிகச்சிறந்தவை ஆகும். அதுதான் உடலுக்கு நல்லது" என கூறினார்.
இதையும் படிங்க: அச்சச்சோ.. வெயிலுக்கு குளுகுளு குளிர்பானங்களை குடிக்கிறீங்களா?.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை செய்தி.!!