சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
ஜாக்கிரதை.. சூடான உணவில் எலுமிச்சை சாற்றை பிழியக்கூடாது.. ஏன் தெரியுமா?..! காரணம் இதுதான்..!!
புனித உணவுகள் மற்றும் பானங்களில் இனிப்பு, புளிப்பு சுவை கலந்த எலுமிச்சையானது உணவுகளின் சுவைகூட்ட பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமான உணவுப்பொருளும் கூ. வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சையானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்,உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
அத்துடன் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரும மற்றும் முடியை மிருதுவாக்கவும், உடலில் இருந்து இறந்த செல்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றவும், இரும்பு சத்து உடலில் சேர்வதை ஊக்குவிக்கவும் பெருமளவில் உதவுகிறது.
பல நேரங்களிலும் ஆவி பறக்க பறக்க இருக்கும் சூடான உணவுகளில் சுவையைக் கூட்ட எலுமிச்சை சாற்றை சேர்க்கிறோம். ஆனால் இந்த தவறை நாம் செய்யக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சூடான உணவுகளில் எலுமிச்சையை பிழிவதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சூட்டிலேயே அழிந்து விடும்.
வெப்பத்தின் மீது வைட்டமின் சி யின் உணர்திறன் அதிகம் :
வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் வெப்பம் மற்றும் வெளிச்சம் இரண்டாலும் பாதிக்கப்படக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள். 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மிகவும் வேகமாக செயல்படும் தன்மையுடையது. எனவே சூடான தண்ணீர் அல்லது சூடான உணவில் எலுமிச்சை சாற்றை சேர்க்கும்போது அதிலுள்ள வைட்டமின் மற்றும் நொதிகள் அழிந்துவிடும்.
எனவேதான் காலையில் வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது பலன் தரும். சிறந்த ஆன்ட்டி ஆக்சிடெண்டான ஃபிளவனாய்டுகள் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் பழத்தில் உள்ளன. இதனை சூடான தண்ணீரில் சேர்க்கும் பொழுது எந்த நன்மையும் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.