மூட்டு வலிக்கு பற்கள் கூட காரணமாக இருக்குமா.?! எப்படி தெரியுமா.?! உஷார்.!



poor-dental-hygiene-can-also-be-a-cause-of-joint-pain

சுவையான உணவுகளை சுவைத்து சாப்பிட உதவுவது நாக்கு மற்றும் பற்கள். நம்மில் பலரும் இதனை சரியாக பராமரிப்பது கிடையாது. அவ்வாறு இல்லாமல் காலை, மாலை இரண்டு வேளையும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பல்பொடி அல்லது டூத்பேஸ்ட் கொண்டு இரண்டு நிமிஷம் மிதமாக பற்களையும், நாக்கையும் தேய்த்து சுத்தம் செய்வது அவசியம். மேலும், பற்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் பராமரிக்க வேம்பு மர குச்சியை பயன்படுத்தலாம். இது கசப்பை ஏற்படுத்தினாலும் உடலுக்கும், பற்களுக்கும் மிகவும் நல்லது. 

பற்களுக்கும் மூட்டுலிக்கும் சம்மந்தம் இருக்கா.?!

பற்களுக்கும், மூட்டு வலிக்கும் சம்மந்தம் இருக்கிறது. பற்களை சரியாக பராமரிக்காமல் விட்டால் மூட்டு வலி வர வாய்ப்புள்ளது என சில ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தொப்பை மற்றும் உடல் கொழுப்பை சர சரவென குறைக்கும் சுரைக்காய் ஜுஸ்..!

dirty tooth

மூட்டுக்களின் உள்ளே புகும் கிருமிகள் :

பற்கள் மற்றும் நாக்கு பகுதியை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகள் அதிகம் உருவாகும். அது உடலெங்கும் பரவத் தொடங்கும். இந்த கிருமிகள் இரத்தத்தில் கலந்து மூட்டுகளின் உள்ளிருக்கும் திரவத்தில் கலந்து மூட்டு வலிக்கு காரணமாகிறது. எனவே, காலை உணவுக்கு முன்னும், இரவு உணவுக்கு பின்னும் பற்களை சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

மூட்டு வலி மட்டுமல்ல உடலில் பல்வேறு பிரச்சனைக்கு பற்களின் சுத்தமின்மை காரணமாக இருக்கும்.

பல் பரிசோதனையின் அவசியம் :

பல் கூச்சம், பல் வலி ஏற்பட்டால் பல் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும். 6 அல்லது 7 மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பற்கள் ஆரோக்கியமாக உள்ளதா என சோதனை செய்வது மிகவும் அவசியம்.

இதையும் படிங்க: நெஞ்சு சளியை வேரோடு அழிக்கும் நெல்லிக்காய் சூப்..! இப்போதே செய்து பாருங்க.!