அடடே... குப்பை மேனியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்.!!



medicinal-benefits-of-acalypha-indica

எதற்கும் பயன்படாத பொருட்கள் தான் குப்பைக்கு வரும். ஆனால் குப்பையில் வளரும் ஒரு செடி நம் உடல் நலத்தை பேணுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதுதான் குப்பைமேனி கீரை. இந்தக் கீரை பூனை வணங்கி, குப்பி மற்றும் அரிமஞ்சரி போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்தக் கீரை மனிதனுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இவற்றின் நன்மைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

சரும நோய்களுக்கு நிவாரணம்

சொறி சிரங்கு போன்ற நோய்களுக்கு குப்பைமேனி இலையை உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் காயங்களுக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவி வர காயங்கள் குணமாகும். மேலும் தொடை இடுக்குகளில் ஏற்படும் படர் தாமரைக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும். உப்புடன் குப்பைமேனியை சேர்த்து அரைத்து படர் தாமரை இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

health tips

சளி மற்றும் நரம்பு பலவீனத்திற்கு நிவாரணம்

குப்பைமேனி இலையை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் நன்றாக வலுவடையும். மேலும் கை, கால் வலி போன்றவையும் நீங்கும். சளி, தொண்டை வலி, தொண்டை கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அதனுடன் சுண்ணாம்பு கலந்து தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் குப்பைமேனி இலையுடன் விளக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லை நீங்கும்.

இதையும் படிங்க: பெண்களே உஷார்.!! மார்பக புற்றுநோய் அச்சமா.? வீட்டிலிருந்தே இந்த பரிசோதனைகளை செய்து பாருங்கள்.!!

ஈரல் நோய்களை குணப்படுத்தும் குப்பைமேனி

மண்ணீரல் மற்றும் நுரையீரல் போன்றவற்றில் ஏற்படும் நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. குப்பைமேனி இலையில் தயாரிக்கப்படும் கசாயத்தை குடித்து வர மண்ணீரல் மற்றும் நுரையீரலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும். மேலும் மண்ணீரல் வீக்கத்திற்கும் இந்த கசாயம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இதையும் படிங்க: ஷாக்கிங்... இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறீர்களா.? உங்கள் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.!!