மறந்தும் ஆப்பிளுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடாதீங்க.!!



foods-to-avoid-eating-with-apple

பழங்களில் ஆப்பிள் மிகச்சிறந்த ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. தினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக் கொண்டால் மருத்துவரை பார்க்க வேண்டாம் என்பது பழமொழி. மனிதனுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குவதோடு உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் ஆப்பிள் கொண்டிருக்கிறது. இத்தனை சிறப்புகள் ஆப்பிளில் இருந்தாலும் இதனை சாப்பிட்ட பிறகு ஒரு சில பொருட்களை சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். iஅந்தப் பொருட்கள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.

தயிர்

ஆப்பிளுடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது என மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். ஆப்பிள் சாப்பிட்ட பிறகு குறைந்தது 2 மணி நேரத்திற்காவது தயிர் சாப்பிடுவதை தவிர்க்கும் படி தெரிவிக்கின்றனர். ஏனெனில் ஆப்பிள் மற்றும் தயிர் இரண்டுமே குளிர்ச்சி தன்மையை கொண்டிருப்பதால் உடலுக்கு சளி தொல்லையை ஏற்படுத்தும்.

health tips

புளிப்பான உணவுப் பொருட்கள்

ஆப்பிள் சாப்பிட்ட பிறகு புளிப்பான உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் ஆப்பிளுடன் இவற்றை சேர்த்து சாப்பிடும் போது வாயுத் தொல்லை, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க: அடேங்கப்பா... மஞ்சள் பால் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா.?

முள்ளங்கி

இது ஒரு சத்தான காய்கறியாக இருந்தாலும் ஆப்பிளுடன் சேர்ந்து சாப்பிடும் போது சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். ஆப்பிளுடன் முள்ளங்கியை சாப்பிடுவதால் சருமத்தில் அலர்ஜி மற்றும் சொறி போன்றவை ஏற்படலாம் என பரவலான கருத்து நிலவுகிறது. எனினும் இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இதையும் படிங்க: அடடே... குப்பை மேனியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்.!!