"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
இந்த அறிகுறி இருந்தா.? உடனே ஹாஸ்பிடல் போங்க.! அலட்சியம் செய்தால் அவஸ்தை நிச்சயம்.!
தற்போது குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் என்று ஆகிவிட்டது. சர்க்கரை நோய் மிகவும் சாதாரண விஷயமாகிவிட்ட நிலையிலும் இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. உடலில் இன்சுலின் அளவு சரியாக இல்லாவிட்டால் ரத்த சர்க்கரை அளவு உயர துவங்குகிறது.
உடல் தானாகவே இன்சுலினை உற்பத்தி செய்கிறது. நீங்கள் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
இதனால் இன்சுலின் சுரப்பது குறைகிறது. உடலுக்கு தேவையான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படாத போது ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இது சிறுநீரகத்தை பாதிப்படைய, செய்து மூளையையும் பாதிக்கிறது. மேலும், நோய்த் தொற்று அபாயங்களும் இருக்கிறது. கோமா நிலைக்கு கூட தள்ளக்கூடிய சக்தி ரத்த சர்க்கரை நோய்க்கு இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் சர்க்கரை நோயை நீங்கள் புத்திசாலித்தனமாக கையாள்வதால் இதுபோன்ற சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
உடலில் ஏற்படும் சில அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.
அதாவது
உடல் சோர்வு,
எதிலும் கவனம் இல்லாமல் இருப்பது
அதீத எரிச்சல் உணர்வு
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு
அல்லது சிறுநீர் மிக தாமதமாக வருவது
மங்கலான பார்வை
பிறப்புறுப்பில், மற்ற இடங்களில் அரிப்பு
சுவாசிப்பதில் சிரமம்
வாந்தி அடிக்கடி
சிறுநீர் தொற்று அல்லது நோய் தொற்றுக்கு ஆளாவது
உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சென்று பார்த்து ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அப்படி இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து அதன் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.