மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாரடைப்புக்கு 24 மணி நேரத்திற்கு முன் இப்படி தான் இருக்குமா.? உயிரை காப்பாற்ற இதுதான் வழி.!
சமீப காலமாகவே மாரடைப்பினால் ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. ஓரிரு நாட்களுக்கு முன் குஜராத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மாரடைப்பினால் மரணமடைந்துள்ள சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கின்றது.
இந்த நிலையில் இந்த மாரடைப்பு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு சில அறிகுறிகள் இருக்கும் என்றும், அவற்றை கவனித்து மருத்துவமனைக்கு சென்றால் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய அறிகுறிகள் :
தலைசுற்றல்
வேகமாக இதயம் துடிப்பது
மூச்சு திணறல்
குமட்டல்
வாந்தி
நெஞ்சு வலி
மயக்கம்.
இந்த அறிகுறிகளானது ஆண், பெண் இருவருக்கும் வேறுபடும் என்று கூறும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக மூச்சு விடுவதில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும், அதே சமயத்தில் ஆண்களுக்கு நெஞ்சில் வலி இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும் என்று கூறுகின்றனர்.
இவ்வாறு அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு சென்றால் அவர்களது மோசமான நிலையில் இருந்து மருத்துவர்களால் காப்பாற்றப்படலாம் என்றும், இது போன்ற எந்த உணர்வையும் அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.