மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாய்ப்புண் பாடாய் படுத்துகிறதா.? கவலை வேண்டாம்... இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!!
வாய்ப்புண் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு உபாதையாகும். வாய்ப்புண் வந்தால் உணவு சாப்பிடுவதில் சிரமம் இருக்கும். மேலும் பல்துலக்கும் போதும் கடுமையான வலி இருக்கும். பொதுவாக வாய் புண் உடல் உஷ்ணம் மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாய்ப்புண் பொதுவாக இரண்டு வாரங்களில் சரியாகிவிடும். எனினும் அவற்றால் ஏற்படும் வலியில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வீட்டிலேயே செய்யக்கூடிய சில கை வைத்திய முறைகள் பற்றி காணலாம். வாய்ப்புண் ஏற்பட்டால் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் அதனை சரி செய்யலாம். இதனால் வாயில் ஏற்படும் வலி மற்றும் வீக்கமும் குறையும்.
வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி கீரை ஒரு சிறந்த மருந்தாகும். இந்தக் கீரையை வாயில் போட்டு நன்றாக மென்று அரைத்த பிறகு சிறிது நேரம் வாயில் வைத்து விட்டு பின்னர் விழுங்கவும். இப்படி செய்வதன் மூலம் வாய்ப்பு குணமாகும். மேலும் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிடுவதன் மூலமும் வாய்ப்புண் குணமடையும். இவை தவிர வாழைப்பூ வாய்ப்புண்ணிற்கு சிறந்த மருந்தாகும்.
மேலும் பிளாக் டீ தயிர் மற்றும் கிராம்பு ஆகியவையும் வாய்ப்புண்ணிற்கு சிறந்த மருந்து. சாதாரண வாய்ப்புண் என்றால் இந்த மருந்துகளை நாம் பயன்படுத்தலாம். வாய்ப்புண் நீண்ட நாட்களாக குணமடையாமல் இருந்தால் அது தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.