பல் வலி பாடாய்ப்படுத்துகிறதா.? எளிதில் நிவாரணம் பெற சில டிப்ஸ்.!!



home-remedies-for-tooth-pain

பல் வலி அனைவரையும் பாடாய்படுத்தக்கூடிய ஒன்று. பல் வலி ஏற்பட்டால் வாயில் அதிகமான வலியோடு ஒருவித எரிச்சலான உணர்வும் ஏற்படும். பொதுவாக இது மோசமான வாய் வழி சுகாதாரம் காரணமாக ஏற்படும். நரம்பு பிரச்சனைகளால் ஏற்படக்கூடிய பல் வலியும் இருக்கிறது. சாதாரண பல் வலிக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சில கை வைத்திய முறைகளைப் பற்றி இங்கு காணலாம்.

கிராம்பு 

கிராம்பு பெரும்பாலும் உணவின் சுவையை அதிகரிக்கப் பயன்படுகிறது. ஆனால் அது பல் வலியையும் குணப்படுத்தும். ஆம், இதற்கு நீங்கள் கிராம்பு எண்ணெயை காட்டனின் உதவியுடன் பற்களில் வலியுள்ள பகுதியில் தேய்த்து வந்தால் சற்று நிவாரணம் கிடைக்கும். இது தவிர கிராம்புகளை மென்று சாப்பிடுவதும் நிவாரணம் தரும்.

Healthy life

பூண்டு 

பூண்டு பல் வலிக்கு மற்றொரு சிறந்த கை வைத்தியம் மருந்தாகும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பூண்டில் காணப்படுகின்றன. இதன் காரணமாக பல் வலி பறந்துவிடும். பூண்டு பற்களை சிறிது தட்டி வலி உள்ள இடத்தில் வைக்கவும். இது பற்களில் இருக்கும் கிருமிகளை நீக்கி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

இதையும் படிங்க: நான் ஸ்டிக் தவா பயன்படுத்தினால் கேன்சர் ஆபத்து., மண்பானை சமையலே சிறந்தது - மருத்துவர் அறிவுரை.!

ஐஸ் தெரபி

பல் வலியைக் குணப்படுத்த ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இதற்காக குளிர்சாதனப்பெட்டியில் இருந்து ஐஸை வெளியே எடுத்து ஒரு கைக்குட்டை அல்லது ஏதேனும் துணி அல்லது ஐஸ் பையில் வைத்து கன்னங்களுக்கு அருகில் வைக்கவும். சிறிது நேரத்தில் ஈறுகளின் வீக்கம் குறையத் தொடங்கும். மேலும் நீங்கள் இந்த தெரபி மூலம் நிவாரணம் பெறுவீர்கள்.

இதையும் படிங்க: இவ்வளவு ஆபத்தா?.. பரோட்டா பிரியர்களே உஷார்.. உயிரே பறிபோகும் அபாயம்.!