இரத்த சோகையா? கவலையே வேண்டாம்: இதை மட்டும் தினசரி உணவில் சேர்த்துக்கோங்க..!



Lettuce has the power to promote blood circulation

பலரும் அதிகமாக விரும்பி உண்ணும் பாலக்கீரைக்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் உண்டு. இரத்த சோகையுள்ளவர்கள், பாலக்கீரை சாப்பிடுவதால் அதை சரிசெய்யமுடியும்.

பாலக்கீரையை ஒரு மூலிகைச் செடி என்பர். தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள். இந்த கீரையை சுலபமாக வீட்டில் வளர்க்கலாம். பாலக்கீரை வளர மண் மற்றும் வண்டல் மண் தேவை. பாலக்கீரை ஒரு அடி முதல் இரண்டு அடி வரை மட்டுமே வளரக் கூடியது. 

பாலக்கீரை ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் தடுக்க உதவுகிறது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பாலக் கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது.