உங்களுக்கு 'O' வகை ரத்தமா.? உஷார்.. இந்த நோய்க்கான வாய்ப்பு அதிகம்.!

பொதுவாக நமக்கு ஏற்படக்கூடிய நோய்கள் நமது ரத்த வகையை பொறுத்துக் கூட அமையும் என்று சமீபத்திய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை வசிக்கின்ற மக்களில் 40 சதவீதம் பேருக்கு 'O' வகை ரத்தம் தான் இருக்கின்றது. இந்த வகை ரத்தத்தை கொண்டு இருப்பவர்களுக்கு பொதுவாக சில நோய் தாக்குதல்கள் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் 'O' வகை ரத்தம் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களது வயிற்றில் ரத்த வகை பிரச்சனைகள் ஏற்படலாம் எனவும், அல்சர் போன்ற பிரச்சனைகள் வரலாம் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் 'O' வகை ரத்தத்தை கொண்டிருப்பவர்களுக்கு இதய நோய்களுக்கான அபாயம் மிகக் குறைவு என்று தெரியவந்துள்ளது.
உங்களுக்கும் ஒருவேளை 'O' வகை ரத்தம் இருந்தால் உங்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். அல்சர் ஏற்படுத்தக்கூடிய மற்றும் ரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.