பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
குரங்கு அம்மை என்றால் என்ன?.. அதற்கான அறிகுறிகள் என்னென்ன?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!
கொரோனா வைரஸ் போல தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது குரங்கு அம்மை நோய். இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் இது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களிலும் குறிப்பிட்ட அளவிலான குரங்கு அம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து இன்று காணலாம். குரங்கு அம்மை என்பது வைரசால் பரவும் ஒரு தொற்று நோயாகும். இது விலங்குகள் இடமிருந்து மனிதர்களுக்கு, பின் மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்கு என பரவும் வகை கொண்டது.
குரங்கு அம்மையின் அறிகுறிகள்: காய்ச்சல் இருந்து கொண்டிருக்கும், தோல்கள் சிவந்து கைகால்கள், உள்ளங்கைகள், முகம் என்று கொஞ்சம் கொஞ்சமாக பரவும். நிணநீர் மண்டலம் பெரிதாகும். உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு இருக்கும். அதனைப் போல, தொண்டை வலி மற்றும் இருமல் இருக்கும்.
குரங்கு அம்மைக்கான சிகிச்சை: காய்ச்சல் அல்லது மேற்கூறிய வலிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை நாடுவது நல்லது.