பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இரத்த சோகை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காளான் - தேங்காய்ப்பால் சூப்.!
காளான் உணவு இரத்த சோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு ஆகும். இதில் உள்ள இரும்பு சத்து, உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. வாரத்திற்கு ஒருமுறை காளான் சாப்பிட்டால், உடலுக்கு இரும்பு சத்து கிடைத்து, இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 10,
தேங்காய்பால் - ஒரு கிண்ணம்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 4 பற்கள்,
சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் - தலா ஒரு கரண்டி,
தேங்காய் எண்ணெய் - 3 கரண்டி,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட காளான், வெங்காயம் மற்றும் பூண்டு, கொத்தமல்லி தழைகளை சிறிதாக நடுங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வானெலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் காளான் சேர்த்து வதக்கி, அதனோடு சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். 2 நிமிடம் ஆனதும் தேங்காய்ப்பாலை சேர்த்து கொதிக்கவைத்து, கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான காளான் சூப் தயார்.