#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரசவத்திற்கு முன்பு குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி பெண்!. அவருடன் சேர்ந்து மருத்துவர் செய்த செயல்!. வைரலாகும் வீடியோ!.
பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவர், தனது இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவத்திற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், தனது மருத்துவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.
மருத்துவமனை அறையிலேயே "Girls Like To Swing" என்ற ஹிந்தி பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது பிரசவத்திற்கு முன்பு மனநிலையை ஒருநிலைப் படுத்துவதற்காக நடனமாடியதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Just a few minutes before the C-section delivery, the Doctor and the patient perform a nice jig. This happened in Ludhiana. pic.twitter.com/ZOlzIhbQ8c
— Harsh Goenka (@hvgoenka) 28 December 2018
இந்நிலையில், இந்த வீடியோ குறித்து கர்ப்பிணி பெண் கூறுகையில், இது என்னுடைய இரண்டாவது வீடியோ. நடனம் என்பது புத்துணர்ச்சி தரக்கூடியது. கர்ப்பிணி பெண்களுக்கு நடனம் ஆடுவது நல்ல உடற்பயிற்சி தான். ஆனால் முறையான வழிகாட்டுதலின் படி அதை செய்ய வேண்டும்.
எனது வீடியோவை பார்த்துவிட்டு யாரும் குருட்டுத்தனமாக பின்பற்றாதீர்கள். நான் ஒரு நடனக்கலைஞர். அதனால் எனக்கு இது சாத்தியமாகவும், எளிதாகவும் இருந்தது என கூறியுள்ளார்.