96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அச்சச்சோ.. முடி அதிகமா கொட்டுதா?.. அப்போ இது உங்களுக்குதான்..! இதுதான் காரணமாக இருக்கும்..!!
இன்றளவில் முடி கொட்டுதல் தொடர்பான பிரச்சனை ஆண், பெண் என இருபாலருக்கும் முக்கியமான அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. இதற்கு வயது, மரபணு மாற்றம், மாறிவரும் வாழ்க்கை முறை போன்று பல பிரச்சனைகள் கூறப்படுகின்றன.
இதனை தடுக்க இயற்கை முறை வைத்தியங்களில் இருந்து ஆங்கில மருந்து வைத்தியங்கள் வரை பல இருக்கின்றன. ஆனால், ஒரு சிலவற்றில் குறிப்பிட்ட பலன் கிடைப்பது இல்லை. உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை நமது உடலின் வளர்ச்சிக்கு வழிவகை செய்வது போல முடியின் வளர்ச்சிக்கும் வழிவகை செய்கிறது.
நான் ஒன்றுக்கு நூறு உரோமங்கள் கொட்டுவது சாதாரணமான நிகழ்வு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளித்த பின்னர் அல்லது குளிக்கும்போது முடி உதிர்வது என்பது பொதுவாக இயல்பானது. ஆண்களை விட பெண்களுக்கு முடி உதிர்வு என்பது அதிகமாகவே இருக்கும்.
அதே போல பெண்களுக்கு கர்ப்ப காலம், மாதவிடாய் பிசிஓஎஸ் போன்ற காலத்திலும் முடி உதிர்வு என்பது அதிகமாக இருக்கும். தலையில் வேர்க்காலில் இருந்து பின் தலைவரை விரலை விடும் போது நமது கைகளில் எவ்வளவு முடி இருக்கிறதோ அதுவே நமது முடி உதிரும் தன்மையாக கருதப்படுகிறது.
அதிகளவு உரோமம் கைகளில் இருக்கும் பட்சத்தில், அதற்கான நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. படுக்கை தலையணையில் முடி உதிர்வது சகஜம் என்றாலும், சாதாரண நாட்களை விட அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்தித்த ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.