இது தெரிஞ்சா இனி சர்க்கரையை தொட்டுக் கூட பாக்க மாட்டீங்க.! தித்திப்பான சர்க்கரையில் இவ்வளவு தீமைகளா.?!



sugar-and-its-harmful-effects-in-our-health

'சர்க்கரை நிலவே', 'சர்க்கரை இனிக்கிற சர்க்கரை' என்ற பாடல்களை எல்லாம் நாம் முணுமுணுப்பதுண்டு. வெல்லத்தை போட்டு செய்தாலும் அதனை 'சர்க்கரைப் பொங்கல்' என்றே கூறுகிறோம். குழந்தையை கொஞ்சும் போது கூட "சர்க்கரைக்கட்டி" என்று கொஞ்சுகிறோம். இவ்வாறாக சர்க்கரை நமது வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது.

health tips

சர்க்கரை கொக்கெயினை விடவும் நம்மை அடிமைப்படுத்தக் கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இனிப்பு சுவை என்றாலே வெள்ளை சர்க்கரை தான் நம் நினைவுக்கு வருகிறது. அதிகப்படியான வெள்ளை சர்க்கரையின் நுகர்வு, நம் உடலுக்கு விளைவிக்கும் தீங்கை கேட்டால், நீங்கள் சர்க்கரையை அறவே ஒதுக்கி விடுவீர்கள்!

health tips

எடை அதிகரிப்பு, மன அழுத்தம், இதயத்தில் வரக்கூடிய நோய்கள், முகப்பரு, தோலில் சுருக்கம், விரைவிலேயே முதுமையான தோற்றம், நீரிழிவு நோய், புற்றுநோய், பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகள், எலும்புகளில் கால்சியம் குறைபாடு, மூட்டு வலி, கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவற்றை சத்தமின்றி தரக்கூடிய வலிமை பெற்றது இந்த வெள்ளை சர்க்கரை.

health tipsவெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இயற்கை நமக்கு அத்திப்பழம், பேரிச்சை, உலர்திராட்சை போன்று எண்ணற்ற இனிப்பு சுவையை தரக்கூடிய பொருட்களை அளித்திருக்கிறது. அவற்றை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.