அச்சச்சோ.. கோடை வெயிலின் தாக்கத்தால் உண்டாகும் நோய்கள்.. இதெல்லாம் செய்யலனா அவ்வளவுதான்..! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!



Sun exposure problems doctors advice

கோடைகாலம் துவங்க இருப்பதால் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் டயரியா நோய்கள் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலக வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளனர். 

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிகப்படியான வெயிலுக்கு செல்லக்கூடியவர்கள் ஹீட் ஸ்ட்ரோக், டைரியா, சின்னம்மை போன்ற பாதிப்புகளால் துன்பப்படுவர். 

உடலில் நீர் சத்து குறைதல், உப்பு சத்து குறைதல் உள்ளிட்ட காரணங்களால் இதயநோய் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன. அதிக வெயிலால் கோடை காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட உப்பு சத்துக்கள் நிறைந்த பழங்கள், தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். 

Sun exposure problems

வெப்பசோர்வு, வெப்பவாதம், அதிக வியர்வை வருதல் போன்ற கோடைகால உடல் உபாதைகள், வெப்பவாதத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உடலில் நீர்ச்சத்து இழந்து மூளையில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோய் ஏற்படுவதற்கு காரணமாக வியர்வை சுரப்பிகள் தாக்கப்படுவது அமைகிறது. 

மூளைநரம்புகள் பாதிக்கப்படுவதால் மூளை செயலிழக்கும் அபாயமும் உண்டு. இதற்கு பழங்கள், எலுமிச்சை சாறு, இளநீர், உப்பு கரைசல் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். பிற்பகல் 12 மணி முதல் 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.