ஷாக்கிங்... இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறீர்களா.? உங்கள் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.!!



these-foods-may-be-life-threatening-shocking-informatio

நாகரீகத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் மனிதர்களின் உடல் நலத்தை பாதிக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. தற்காலத்தில் பணிச்சுமை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலானவர்களும் துரித உணவுகளுக்கு அடிமையாக இருக்கின்றனர். இது அவர்களது உடல் நலத்தை பெரிதும் பாதிக்கிறது. சில உணவுகளை பார்க்கும்போது அவற்றை சாப்பிடும் ஆசையை நமக்கு தூண்டும். ஆனால் அவற்றை நாம் சாப்பிட்டால் அது நமக்கு எமனாக கூட மாறலாம். அதுபோன்ற சில உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மோரிஸ் வாழைப்பழம்

பெங்களூர் வாழைப்பழம் அல்லது மோரிஸ் என்றழைக்கப்படும் இந்த வாழைப்பழம் பெரும்பாலான நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள கடைகளில் கிடைக்கிறது. இந்தப் பழம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். மேலும் பார்ப்பவர்களை சுவைக்க தூண்டும். ஆனால் இந்த பழம் உயிருக்கு மிக ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்டு திசு வளர்ப்பு முறையில் தயாரிக்கப்படும் இந்த வாழைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை, சைனஸ், ஆஸ்துமா மற்றும் தோல் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Healthy Food

செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்கள்

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானவர்களும் குளிர்பானங்களை அருந்துவது வழக்கம். இனிப்பு சேர்க்கப்படாமல் இயற்கையான முறையில் பழச்சாறுகளை கொண்டு தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை. ஆனால் ரசாயனங்கள், செயற்கை முறையில் சுவையூட்டப்பட்ட நிறமிகள் பயன்படுத்தப்படும் குளிர்பானங்களை குடிப்பதால் உடலுக்கு தீமை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றில் ஊட்டச்சத்துக்கள் ஏதுமில்லை. அதே நேரம் தொடர்ந்து இவற்றை பருகி வருவதால் உடலின் கால்சியம் சத்துக் குறையும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் அல்சைமர் போன்ற மறதி வியாதிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை வளமையாக பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த உணவுகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த உணவுகளை பதப்படுத்துவதற்கு நைட்ரஜன் மட்டுமல்லாமல் பிற ரசாயனங்களும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உடல் பருமன், சர்க்கரை வியாதி, கெட்ட கொழுப்பு மற்றும் நுரையீரல் வீக்கம் போன்ற உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.