கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
"முடி கொட்டுதுன்னு கவலையா இருக்கா.?.." அடர்த்தியான கருமை நிற கூந்தலைப் பெற இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!
சுருள் சுருளான, ஆரோக்கியமான கேசம் யார் தான் வேண்டாம் என்பார்கள்? இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இருக்கும் பிரச்சனை தலைமுடி உதிர்வது தான். உணவு பழக்கங்களையும், வாழ்வியல் முறை மாற்றங்களால் முடி உதிர்வதை கட்டுப்படுத்த முடியும்.
வாரத்தில் மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அகலமான பல்வரிசை உள்ள சீப்புகளை பயன்படுத்துவது கேசத்துக்கு நல்லது. ஹேர் டிரையரின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுவது உகந்தது. ஷவருக்கு அடியில் நின்று அதிக நேரம் குளிப்பதால், முடி உதிரக்கூடும்.
நம்முடைய தோலின் பி.ஹெச் (pH) 5.5 (அமிலத்தன்மை) ஆகும். எனவே இதற்கு நெருக்கமான அளவு அமிலத்தன்மை உள்ள ஷாம்புகளை வாங்கி பயன்படுத்தவும். ஷாம்புவை முடியின் வேர்களுக்கும், கண்டிஷனரை முடியின் நுனிக்கும் பயன்படுத்துங்கள்
சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். பயோட்டின் மற்றும் இரும்பு சத்து உள்ள உணவுகள் முடி வளர்ச்சிக்கு உதவும். ஹேர் டிரையர் போன்றவற்றை அடிக்கடி உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். பரம்பரை ஜீன்களும், வயதும் ஹார்மோன் மாற்றங்களும் நமது தலைமுடியின் அடர்த்தியை தீர்மானிக்கிறது. இருப்பினும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கேசத்தை ஆரோக்கியமாக பேணலாம்.