குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அம்மாடியோவ்..! ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லிட்டர் நாகப்பாம்பு விஷம்..!! 6 பேரை கைது செய்த அதிகாரிகள்..
ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஒருலிட்டர் நாக பாம்பின் விஷத்தை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் வனச்சரக அதிகாரிகளுக்கு பாம்பு விஷம் கடுத்தப்படுவது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பாம்பு விஷம் வாங்கும் வாடிக்கையாளர்கள்போல் வேடமிட்டு சென்ற வனத்துறை அதிகாரிகள், பாம்பின் விஷத்தை விற்பனை செய்த ஒரு பெண் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு லிட்டர் கொடிய பாம்பின் விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5மிமீ அளவு கொண்ட பாம்பின் விஷத்தை மாதிரிக்காக கொண்டுவந்த அவர்கள், தங்களிடம் இருந்த 1 லிட்டர் விஷத்தை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்மந்தப்பட்ட நபர்களை அதிகாரிகள் விசாரித்தபோது, இதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது எனவும், இதில் ஏதோ மருந்து உள்ளதாகவும், அதனை ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்று தங்களிடம் ஒருவர் கொடுத்து அனுப்பியதாக அவர்கள் தெரிவித்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், சர்வதேச சந்தையில் இந்த 1 லிட்டர் விஷம் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகும் எனவும், இந்த ஒரு லிட்டர் நாக பாம்பின் விஷத்தை சேகரிக்க, சுமார் 200 நாகங்களிலிருந்து விஷம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறினார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.