மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமையல் செய்தபோது வெடித்து சிதறிய சிலிண்டர்! 10 பேர் உயிர்களை பலி வாங்கிய பயங்கரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முகமதாபாத் அருகே உள்ள வாலித்பூர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் இன்று காலை சமையல் தயார் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அதிர்வு ஏற்பட்டு 2 மாடி கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்ததால் வீட்டில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7 dead and 15 injured after a two-storey building collapsed following a cylinder blast at a home in Mohammadabad, Mau. Several feared trapped. More details awaited. pic.twitter.com/cFr7Q0pEr4
— ANI UP (@ANINewsUP) October 14, 2019
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இன்று அதிகாலையில் நடந்த விபத்து உத்தரப் பிரதேச மாநிலத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.