திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொடூரத்தின் உச்சம்... கண்கள் நோண்டப்பட்டு கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன்... பெண் சாமியார் உட்பட 6 பேர் கைது.!
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சாமியார் மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் சுபர்ணாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பசந்தி. இவரது 13 வயது மகன் சஞ்சீவ் பிஸ்வாஸ். சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை தொடர்ந்து அவனது தாயார் அந்தப் பகுதியைச் சார்ந்த பெண் சாமியார் ரீதாஞ்சலி என்பவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.
அந்தப் பெண் சிறுவனுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்று தாய் மற்றும் மகனை தனித்தனி அறைகளில் தங்க வைத்திருக்கிறார். பசந்தி மறுநாள் காலை எழுந்து தனது மகனை தேடிய போது சிறுவனை காணவில்லை. பின்னர் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு வெளியே சிறுவனின் கை, கால்கள் வெட்டப்பட்டு கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு சிறுவனின் உடல் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்து கதறிய அவர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் பெண் சாமியார் அவரது மகன்கள் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவன் நரபலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கிறான் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.