கொரோனா பயங்கரம்.! ஒரே ஆம்புலன்சில் 22 சடலங்களை திணித்து எடுத்துச்சென்ற அவலம்.! நெஞ்சை நொறுக்கும் புகைப்படம்.!



22-dead-bodies-in-one-ambulance

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் காட்டு தீயாக பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முக்கியமானவை, மகராஷ்ட்டிரா, டெல்லி. இங்கு கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. 

பல மாநிலங்களில் இறந்தவர்களின் உடல்களை எரிக்கக்கூட, வரிசையில் காத்திருக்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மகாரஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில், அம்பஜோகாய் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களை ஒரே ஆம்புலன்சில் அள்ளிப்போட்டு எரிப்பதற்கு எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 

அந்த மருத்துவமனையில் உள்ள பிணவறையில், கொரோனாவால் இறந்தவர்கள் உள்ளிட்டோரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கிருந்து, கொரோனாவால் இறந்த 22 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் ஒரே ஆம்புலன்சில் திணித்து மயானத்துக்குஎடுத்துச் செல்லப்பட்டன. இது பற்றிய தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமணியில் போதுமான ஆம்புலன்ஸ்கள் இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.