திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒன்றல்ல, ரெண்டல்ல...குடிநீர் தொட்டியிலிருந்து வந்த மோசமான துர்நாற்றம்.! திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள நந்திகொண்டா கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரில் மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது.
இந்த நிலையில் கிராமத்தினர் இதுகுறித்து அதிகாரிகளிடம தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். குடிநீர் தொட்டிக்குள் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழந்து உடல் அழுகி கிடந்துள்ளது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மக்களுக்கு செல்லும் தண்ணீரை உடனடியாக நிறுத்தினர்.
பின்னர் குரங்குகளின் சடலம் அகற்றப்பட்டு, தண்ணீர் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீருக்காக உள்ளே இறங்கிய குரங்குகள், மேலே வர முடியாமல் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிது. மேலும் குரங்குகள் இறந்துகிடந்த தொட்டியிலிருந்து ஒரு வாரமாக மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தொட்டிக்குள் குரங்குகள் உயிரிழந்து கிடந்ததற்கு வேறு ஏதேனும் விஷம காரணங்கள் உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.