திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அம்மாடியோவ்.. இவ்வளவு ஐட்டங்களா.! மாமனார் கொடுத்த தடபுடலான விருந்து.! அதிர்ந்துபோன மருமகன்!!
ஆந்திராவில் புது மாப்பிளைக்கு 379 உணவுகளை சமைத்து தடபுடலாக விருந்து வைத்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உழவுத் தொழிலை மதிக்கும் வகையில் தமிழர்கள் பொங்கல் தினத்தை கொண்டாடுவர். அவ்வாறு ஆந்திராவில் கொண்டாடப்படும் விழாதான் சங்கராந்தி. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு முதல் சங்கராந்தி தினத்தை கொண்டாடிய தன் மருமகனுக்கு தொழிலதிபர் ஒருவர் தடபுடலாக 379 வகை உணவு வகைகளை கொண்டு விருந்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எலுரு நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பீமாராவ். இவரது மகள் குஷ்மாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புத்தா முரளிதர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களது முதல் சங்கராந்தி தினத்தை முன்னிட்டு பீமாராவ் மற்றும் அவரது மனைவி 379 உணவு வகைகளை தயார் செய்து மருமகனுக்கு தடபுடலாக விருந்து வைத்துள்ளனர்.
இந்த உணவிற்கான மெனுவை பீமாராவ் தம்பதியினர் 10 நாட்களாக தயார் செய்துள்ளனர். இந்த விருந்தை கண்டு மருமகன் முரளிதர் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் இத்தகைய விருந்து குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஆந்திராவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.