#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆட்டோ மீது கவிழ்ந்த மணல் லாரி: 3 மாணவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி!.. இரவில் நடந்த கொடூரம்..!
மஹாராஷ்டிர மாநிலம், ராய்கர் பகுதியில் நேற்று இரவு மாணவர்கள் 3 பேர் தேர்வு முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் பயணம் செய்த ஆட்டோ மீது மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் 3 மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது இரங்கலை தெரிவித்ததுடன் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.