திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுற்றி வளைத்து வெறியோடு கடித்து குதறிய தெருநாய்கள்.! துடிதுடிக்க 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 4 வயது சிறுவன் நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பாக் ஆம்பர்பேட் பகுதியில் வசித்து வருபவர் கங்காதரர். இவரது 4 வயது மகன் பிரதீப். கங்காதர் அப்பகுதியில் உள்ள ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப்பில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தான் வேலை செய்யும் இடத்திற்கு தனது மகனை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு பிரதீப் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது. சிறுவன் பிரதீப் தெருவில் தனியாக நடந்து வருகையில் அவனை மூன்று தெரு நாய்கள் சூழ்ந்து தாக்க தொடங்கியுள்ளது. பயந்து போன சிறுவன் நாய்களிடமிருந்து தப்பித்து ஓட முயன்றுள்ளான். ஆனால் நாய்கள் அவனை தள்ளி அவன் மீது ஏறி பயங்கரமாக கடித்து குதறியுள்ளது.
இந்நிலையில் அங்கு ஓடி வந்த சிறுவனின் தந்தை படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ வைரலாகி பதறவைக்கிறது. மேலும் இதனைத் தொடர்ந்து தெருநாய்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.