"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
மாடுகள் கடத்தல்.. சினிமா பாணியில் 22 கி.மீ சேசிங்.. நடந்த பரபரப்பு சம்பவம்..!
பசுமாடுகளை கடத்தி சென்ற கொள்ளையர்களை, துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரியானாவில் குருகிராம் பகுதியில் மாடுகளை ஒரு கும்பல் கடத்தி, வாகனத்தில் மிக அதிவேகமாக சென்றுள்ளது. இது குறித்து தகவலறிந்த சிறப்புக் காவல் படையினர் அந்த வாகனத்தை துரத்திக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது தப்பிப்பதற்காக குறுக்கு வழியை யோசித்து, கடத்தல்காரர்கள் ஒவ்வொரு மாடாக சாலையில் வீசி காவல்துறையினரை திசைதிருப்ப முயற்சி செய்தனர்.
இருந்தபோதிலும் காவல்துறையினர் விடாமல் அவர்களை துரத்தி சென்றுள்ளனர். மேலும், துப்பாக்கியால் வானத்தை சுட்டு டயரை பஞ்சர் ஆக்கினார். ஆனாலும், பஞ்சரான வாகனத்தில் கொள்ளையர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
இதனை அடுத்து 22 கிலோமீட்டர் துரத்தி சென்ற பின், மாடுகளை கடத்திய கொள்ளையர்கள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த கள்ளத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தற்போது ஹரியானாவில் மாடு கடத்தல் அதிகரித்து வருவதால், அதனை தடுப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடனடியாக தகவலறிந்து மாடு கடத்தல் கும்பலை பிடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.