மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
75 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை! கயவர்களின் கொடூர செயல்!
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் கொலஞ்சேரிக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த75 வயது மூதாட்டி, கடந்த 2ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த மூதாட்டிக்கு நினைவாற்றல் இழப்பு நோய் இருந்துள்ளது.
இந்தநிலையில் இவர் தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த மூதாட்டி பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் அந்த மூதாட்டியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து, தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.