மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்பி பிரியர்களே கவனம்..! பெண்ணின் வாயில்.... வைரலாகும் வீடியோ..!!
செல்பி எடுக்க முயற்சித்த பெண்ணின் வாயில், பறவை எச்சம் போன பகீர் சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
செல்போன்கள் நம்மிடையே அறிமுகமான நாட்களில் இருந்து, அதற்கு நமது பொன்னான நேரத்தை விரயம் செய்து இன்பமாக இருந்து வருகிறோம். சிலருக்கு அதன் வாயிலாகவே வருமானமும் வருகிறது.
செல்பி என்பது நமிடையே இன்று அதிகளவு பரவி கிடக்கிறது. நமது செயல்பாடுகளை நினைவில் சேகரித்து வைக்கவும், அதனாலேயே ஆட்பட்டு கிடப்பதும் என பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது இணையத்தில் வீடியோ பதிவொன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், பெண்மணியொருவர் செல்பி விடியோவை நாக்கை அழகாக வெளியே நீட்டியவாறு எடுக்க முயற்சிக்கிறார்.
இவர் மரக்கிளையின் அடியில் அமர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த நிலையில், அவருக்கு மேலே அமர்ந்து இருந்த பறவை தனது எச்சத்தை வெளியேற்ற, அது பெண்மணியின் நாக்கில் பட்டு கீழே விழுகிறது.
இதனை கவனித்த பெண்மணி அதனை துடைத்து மேலே பார்க்க, மேலே பறவை அமர்ந்திருந்தது. இதனை சற்றும் எதிர்பாராத பெண்மணி திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாகி வாந்தி எடுப்பது போல நாக்கை சுத்தம் செய்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
செல்பி பிரியர்களே கவனம்...